Sunday, April 16, 2006

மணிமொழி நீ என்னை மறந்துவிடு

இந்த வார விகடனில் "விகட்ன் 81" பகுதியில் கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த 'சங்கர்லால்' புகழ் தமிழ்வாணன் விகடனில் 1959-ஆம் ஆண்டில் ஒரு மர்ம தொடர்கதை எழுதியதாக கூறி அந்த தொடர்கதையின் முதல் பக்கத்தை சிறு படமாக வெளியிட்டுள்ளனர். அப்படத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இருந்ததால் அதை படித்த போது அத்தொடர்கதையின் ஒரு பக்கம் ஒரு சிறுகதைக்கு போல் இருந்தது. இதொ அதை கவனிக்க தவறியவர்களுக்கு.

வித்தியாசமாக இருக்கட்டுமே என்று (பதிவு போட வேறு எதும் இல்லாததால்/கிடைக்காதால்) ...

இனி கதை.........

அவர் மணிமொழியின் மாமனார்,தம் நிலையை இழந்து மயக்கம் மடைந்து படுக்கையில் கிடந்தார் ! மணிமொழி அவர் அருகில் சென்று பார்த்தாள்.டாக்டர் எழூந்து நின்று மணிமொழியின் மாமியாரிடம் " இரத்தக்கொதிப்பு ! நல்ல ஓய்வு வேண்டும்,அவர் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக்க் கொள்ளுன்ங்கள் நான் போய் மருந்து அனுப்புகிறேன்" என்றார்.

மாமியார் அழுது கொண்டே தலையை அசைத்தார்.டாக்டர் புறப்பட்டார், முத்தழகு டாக்டரின் பையைக் கையில் எடுத்துக் கொண்டு பின்னால் சென்றான்.வெளியே கார் புறப்படும் சத்தம் கேட்டது.
மணிமொழி மெல்ல நடந்து வெளியே தோட்டத்திற்கு வந்து மரத்தடியில் புல் தரையில் உட்கார்ந்து அன்னாந்து பார்த்தாள். ஒரு பறவை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது மணிமொழி போல் அதற்க்கும் எங்கே போவது என்ன செய்வது என்று தெரியவில்லையா.

பறவை வானத்தைச் சுற்றி வட்டமிட்டதைப் போல மணிமொழியின் மனமும் இரண்டு பேர்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது அவர்கள் --

அப்பா : முத்தழகு !

'அப்பாவை பிரிந்து வந்தது போல முத்தழகையும் பிரிந்து தாம் எங்காவது சென்று விடுவதுதான் நல்லது அவர் 'அண்ணி அண்ணி ' என்றழைக்கும்பொதெல்லாம் நமக்கு இதயமே பிளந்து விடுவது போல் இருக்கிறது ! என்றைக்கும் உண்மை நிலையானது. ஒரு நாளைக்கு உண்மை தெரிந்தப்பிறகு எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது ? எந்த்க் காரண்த்தைக் தாம் இந்த வீட்டில் தங்கியிருக்க முடியாது ! இன்றைக்கே இந்த வீட்டை விட்டுப் போய் விட்டால் என்ன? இன்றைக்கேவா ? மாமனார் மனம் மறந்து கிடக்கிற இந்த நேரத்தில் நாம் வெளியேறலாமா? நம்மைக் கானோம் என்ற செய்தி மாமனாருக்குத் தெரிந்தால்.....?

இப்படி கண்டதையெல்லாம் நினைத்து கொண்டிருந்த மனிமொழியின் மனம் கலங்கி நின்றது...

*******************************
இந்தக் தொடர்க்கதையை முழுமையாக யாரேனும் படித்திருந்தால் அதை ஒரு பதிவாக இடலாமே ........... ? திட்டுபவர்களும் திட்டலாம்...

Tuesday, April 11, 2006

S.Ve சேகர் Vs நெப்போலியன்- தேர்தல் ரவுன்டப்

சென்னையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத்தொட்ங்கியுள்ள நிலையில் மயிலாபூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதில் பிரபல நகைச்சுவை மற்றும் நாடக நடிகர் S.Ve.சேகரும், ஆக்க்ஷ்ன் நடிகர் நெப்போலியன் போட்டியிடுகின்றன்ர்.

மயிலாப்பூர் என்றவுடன் அதன் குளமும்,பிராமனர்கள் வாழும் தெருக்ள் மற்றும் இன்னும் பழைய சென்னையை நினைவுட்டும் பகுதிகள் நிறைந்த ஒரு தொகுதி. இந்த முறை பிரபல நகைச்சுவை மற்றும் நாடக நடிகர் S.Ve.சேகர் ஆதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்க்கும் திமுக வேட்ப்பாளர் நடிகர் நெப்போலியன்.

சென்ற சனிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கிய S.Ve.சேகர் " இது உள்ளுர்வாசிக்கும்,வெளியூர்வாசிக்கும் நடக்கும் போட்டி,நான் மயிலாபூரில்1958 முதல் வசிப்பவன்". இவருக்கு இத்தொகுதில் அறிமுகம் தேவையில்லை மற்றும் பிராமன்னர் என்பது கூடுதல் பலம். ஆனால் அனைத்து பிராமன தரப்பு ஓட்டுக்களை கவர்வது கடினம் என்று ஓப்புக்கொள்கிறார். ஏன் எனில் " பலர் வீட்டில் இருந்தபடியே அரசியல் பற்றி அலசுவர் ஆனால் வெளியே வந்து ஓட்டு போடுவது இல்லை" என்கிறார்.

இவரை எதிர்த்து போட்டியிடும் நெப்போலியன் சென்ற முறை வில்லிவாக்கத்தில் போட்டியிட்டவர்.இம்முறை தொகுதி கூட்டனிக்கு சென்றுவிட்டதால் இத்தொகுதில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நடிகன் என்று தனக்காக விழும் ஓட்டுக்களை விட திமுகவிற்காக விழும் ஓட்டுக்களையே நம்பியுள்ளார்.

திரைப்படங்களில் வேண்டும்எனில் கதாநாயகன் நெப்போலியன் உச்சக்கட்டங்களில் வெற்றிபெறுவார் எனலாம் ஆனால் சட்டமன்ற இருக்கை போட்டியில் S.Ve.சேகர் is Mylapore's Favorite.

நன்றி- CNN-IBN.(செய்தி தொகுப்புக்காக)