Saturday, May 26, 2007

மாநிலங்களவை தேர்தல் : திமுக சார்பில் கனிமொழி

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், திருச்சி சிவாவும் போட்டியிடுகின்றனர்.

கனிமொழி மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்பது பல நாட்களாகவே அனைவரும் கருதிவந்த நிலையில் இன்று மாலை அறிவாலயைத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுவிட்டது.கருணாநிதி தன் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும முன்நிறுத்தியிருப்பதன் மூலம் டில்லியில் ஒரு நம்பகமான ஆள் தனக்கு வேண்டும் என்றும் , அதுவும் தன் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தவிற வேறு யாரும் நம்பி இருக்க முடியாது என்பதனை தெளிவாக முடிவெடுத்து அறிவித்துள்ளார் என்பதனை அறியமுடிகிறது.

மற்றொரு வேட்பாளரான திருச்சி சிவா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது


தமிழகம் சார்பாக மொத்தம் 18 உறுப்பினர் பதவிகள் உள்ளன

Sunday, May 20, 2007

பிளட் டைமன்டு -- எனது பார்வையில்

நான் சமிபத்தில் பார்த்து ரசித்த இரண்டு திரைபடங்கள் "பர்சுய்ட் அப் ஹப்பினஸ் (pursuit of Happiness)" மற்றும்& "பிளட் டைமன்டு (Blood Diamond)" முதல் திரைப்படம் சற்று மென்மையான கதையமைப்பை கொன்டது இதனைப்பற்றி பிறகு ஓரு நாள் பார்க்கலாம்..

இந்த பதிவு இரண்டாம் படத்தினை பற்றியது, இது படத்தினை பற்றிய விமர்சனம் அல்ல, விமர்சனம் பன்னும் அளவு நான் ஒன்றும் எக்ஸ்பர்ட் இல்லை, இது அந்த படத்தினை பற்றியது அவ்வளவே..

முதன் முதலாக பெரிய பதிவு போடுவதால், படிப்பவர்கள் வாக்கிய கோர்வை சரிவர இல்லாமைக்கு மண்ணிக்கவும்


படம் ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்தில் துவஙகு்கிறது, அந்த கிராமத்தில் உள்ள ஒரு மீனவனின் விட்டில், தன் மகன் படிப்பதை கண்டு பெருமை படும் அப்பா சாலமன் (டிஜிமோன் ஹோனசு)வாழ்க்கையில் திடீர் என்று அந்த கிரமத்துக்குள் புகும் தீவிரவாத கும்பல்லால் தடம் புரள்கிறது. கிரமத்துக்குள் புகும் தீவிரவாத கும்பல் அங்கு இருக்கும் பென்களை கொன்று ஆன்களை பிடித்து வலிமையானவர்களை வைரம் தோன்டும் அடிமைகளாகவும் வலிமையற்றவர்களை ஈவு இரக்கமின்றியும் கொல்கிறது,தன் குடும்பத்தை காப்பாற்றும் போது அக்கும்பலிடம் மாட்க்கொள்ளும் சாலமன் வைரம் தோன்டும் பனிக்கு செல்கிறான்.வைரம் தோன்டும் இடத்தில் ஒரு மிக பெரிய சிகப்பு நிற வைரம் ஒன்றினை கண்டுபிடித்து ஒளித்து வைக்கும் வேளையில் தீவிரவாத கும்பலின் தலைவன் பார்வையில் படுகிறான் அப்போது அங்கு வரும் உள் நாட்டு இரானுவதினரிருடன் நடக்கும் சன்டையில் இருவரும் தனி தனியே சிறைபிடிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் வைரம் தோன்டும் கும்பலிடம் இருந்து குறைந்த விலை கொடுத்தும் அல்லது அவர்களுக்கு சொகுசாக வாழ டிவி போன்றவற்றை கொடுத்து வைரத்தை பெற்று கள்ளத்தனமாக வெளிமார்கெட்டுக்கு கொன்டுவந்து அதிக விலைக்கு விற்க்கும் இடைத்தரகனாக டேனி ஆர்சர் (லியர்னடோ டி காப்ரியோ) அவனை வேலைக்கு அமர்த்தி வைரங்களை பெற்று அதில் நிரைய பணம் பன்னும் நபரக கலோனல் கோடிசு (அர்னால்டு வோல்சோ மம்மி பட வில்லன்).

ஒரு முறை வைரம் கடத்திக் கொன்டு வரும் போது உள் நாட்டு இரனுவத்தினரிடம் மாட்டி சிறை செல்லும் டேனி அங்கு தீவிரவாத கும்பல் தலைவனுகும் சாலமனுக்கும் நடக்கும் ஒரு வாக்குவதத்தில் அவன் ஒளித்து வைத்திருக்கும் வைரம் பற்றி அறிகிறான்,சிறையை விட்டு வெளிவரும் டேனி ,சாலமனையும் அவனுக்கே தெரியாமல் வெளியெ கொண்டு வருகிறான், இதனிடையே தீவிரவாத கும்பலின் தலைவன் சிறையிலில் நடக்கும் கலவரதில் தப்பித்து மீன்டும் கிரமத்திற்கு சென்று சாலமனின் மகனை பிடித்து அவனுக்கு துப்பாக்கி,மற்றும் போதை மருந்தை கொடுத்து அவனை ஒரு கமான்டர் என்று கூறி அவனுக்குள் ஒரு போதை வெறியை உன்டாக்கி குடும்பத்தை மறக்க செய்து ,சாலமனிடம் இருந்து வைரத்தை பெறுவதற்கு திட்டமிடுகிறான்

இழந்த தன் குடும்பத்தை தேடும் சாலமனிடம் வந்து டேனி தனக்கு அந்த வைரத்தை கொடுத்தால் உன் குடும்பத்தை தேட உதவுவதாக பேரம் பேசுகிறான்,முதலில் மறுத்தாலும் பின்னர் மிக பெரிய ஆப்பிரிக்காவில் கறுப்பினத்தினை சேர்ந்த தன்னால் ஒன்றும் இயலாது என்பதால் பேரத்திற்கு சம்மதிக்கிறான்.

இதனைடையே அமேரிக்காவில் இருந்து வந்து வைரங்கள் எப்படி ஆப்பிரிக்கவிலிருந்து கள்ளத்தனமாக மார்க்கட்டுக்கு போகிறது என்று அறிய வரும் பத்திரிக்கையாளர் மேன்டி போவன் (ஜெனிபர் கூளுனி),இடை தரகனான டேனியிடமே அவனிடம் இருந்து வைரம் வாங்கும் பெரிய நிறுவனங்களை பற்றி துரத்தி துரத்தி கேட்கிறாள்

வைரத்தை தேடி டேனியும்,தன் குடும்பத்தை தேடி செல்லும் சாலமனும்,உள் நாட்டு கலவரங்களிடையே உயிரை பனயம் வைத்து செல்கின்றனர், ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலையில் ,பத்திரிக்கையாளர் ஆன மேன்டியிடம் உதவி கேட்கிறான் டேனி ,முதலில் மறுத்தாலும் பின்னர் டேனி பேட்டி தருவதற்கு ஒப்புகொள்வதால் சம்மதித்து,பத்திரிகையாளார் செல்லும் வாகனத்தில் அழைத்து செல்கிறாள் .அங்கே சாலமன் ஐநா சபையின் அகதிகள் முகாமில் தன் மனைவியையும் மகளையும் கான்கிறான், மகனை தீவிரவத கும்ப்பல் தூக்கி சென்றதை அறிந்து துடிக்கிறான். இதனிடையே ஆப்ரிக்காவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தினால்,மக்கள் அகதிகளாக் அவதிபடுவுது,சிறுவயதிலேயெ துப்பாக்கி எந்தி கல்வரத்தில் கை,கால் இழந்து பரிதாமாக இருக்கும் சிறுவர்கள், அவர்களை எடுத்து கல்வி புகடும் வயதான நபர் பின்னர் அதே நபர் வேறு சில சிறுவர்களின் துப்பாக்கிக்கு இரையவது,டேனிக்கும் , மேன்டிக்கும் இடையே எற்ப்படும் மெல்லிய காதல் என்று படம் பயனிகிறது.

கானமல் போன மகன் கிடைத்தான, சாலமன் குடும்பத்துடன் இனைந்தான ?, டேனிக்கு வைரம் கிடைத்தா ? பல்லாயிரக்கனக்கான் மக்களின் இரத்ததில் இருந்து வரும் வைரத்தை குறைந்த விலைக்கு வாங்கிவிற்றும் பெரியமனிதர்களின் முகமூடியை மேன்டிக் எப்படி கிழித்தெரிந்தார ? என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.


படதில் பல காட்சிகள் பல காட்சிகள் நச்சென்றும்/முகத்தில் அறைவது போன்றும் அமைத்துள்ளார் இயக்குனர். உதரனதிற்கு சில

ஆப்பிரிக்காவில் யாரை யார் எப்பொழுது கொல்வார்கள் என்றே தெரியாது அதுற்கு அங்குளவர்கள் கூறுவது " TIA -- திஸ் இஸ் ஆப்பிரிக்கா" . இதே வாக்கியம் கடைசியில் தன்னை ஆளாக்கிய கலோனல் கோடிசுவை வைரத்திற்காக கொல்லும் காட்சியில் இறக்கும் தருவாயில் டேனியை பார்துது கேட்பார்.

அதேப்போல் சாலையில் விபத்துக்குள்ளான வாகனத்தில் உள்ளவர்களை காப்பற் அவ்வழியில் வரும் பத்திரிக்கையாளர்கள் முயலும் போது அதுவரை பதுங்கியிருந்து தீவிரவாதிகள் தாக்ககுவது.தீவிரவாத கும்பலில் இருக்கும் மகனை தேடி வரும் சாலமனை மகன் தீவிரவாத போதையில் தாக்குவதும் பின்னர் அதே மகன் டேனியின் முன்பு துப்பாக்கி எடுத்து நீட்டும் போது தன் மகன் எப்படிபட்டவன் என்று சாலமன் மகனிடம் கூறுவது போன்ற காட்சிகளை சொல்லலாம்...

டெக்கினிகல் விஷயங்களில் ஹாலிவுட் படங்களுக்கே உரிய அனைத்தும் இப்படத்தில் உள்ளது, இருந்தாலும் ஆப்பிரிக்காவின் புழுக்கம் நிறைந்த இடங்களாகட்டும் , அடர்ந்த காடுகள் என்று ஓளிபதிவு சிறப்பாகவே இருக்கிறது...

படம் முடியும் போது 2003 கிம்பர்ளி ஒப்பந்தம் இது போன்று வைரங்களை கொன்டு வருவதில்லை என்றும் என்று கையெழுத்தாகிறது என்றும், ஆனால் இன்னமும் இது போல் வைரங்கள் கள்ளத்தன்மாக வருகிறது என்கிறது . இது மட்டும்மின்றி இன்னும் ஆப்பிரிக்காவில் 200,000 சிறார்கள் தீவிரவதிகாளக, இருகிறார்கள் என்கிறது.இன்று நாம் பயன்படுத்தும் வைரத்தில் 20-40% வைரம் மட்டுமே நேர்வழில் கொன்டுவரப்படுவதாகவும் மீதம் உள்ள வைரங்கள் இப்படத்தில் கூறபட்டுள்ளது போல் பல்வேறு கைகள் மாறி கள்ளத்தன்மாக வருவதாகவும் இப்படம் கூறுகிறது.

படத்தை பார்த்து முடிக்கும் போது வைரத்தின் மீது ஒரு வெறுப்பையே படம் உண்டாக்குகிறது அவ்வளவு அளவு படத்தின் தாக்கம்.

Friday, May 18, 2007

கிரிக்கெட் -- இந்தியா உனவு இடைவேளையின் போது 113/1

இந்திய அணியின் ஸ்கோர் உனவு இடைவேளையின் போது 113/1 . டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பந்திலேயே வாசிம் விக்கட்டை இழந்தது,அதன் பிறகு வந்த டிராவிட்,கார்த்திக்குடன் நிதானமகவும் சிறப்பாகவும் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

டிராவிட் -- 52*
வழக்ம்போல் சீகிரமாகவே ஆடுகளத்து வரவழைக்ப்பட்டார்,அதுவும் இரண்டாவது பந்திலே,டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்ந்துஎடுக்கும் போது இவ்வளவு சீக்கிரம் வருவொம் என்று நினைத்து பார்த்திருக்காமாட்டார். ஆனால் வந்து நின்ற முதல் நிதானமாகவும் ஒவ்வொரு பந்தின் தன்மைக்கேற்ப்ப விளையாடினார்.லைன் மாறி தவறாக்வீசிய பந்துகளை தன்டிக்க தவறுவதில்லை

கார்த்திக் --54*

நம்மாளுக்கு இது எல்லாம் கைகூடிவரும் நேரம் போல் துவக்க ஆட்டக்காரக இறங்கி முதலில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து சிறப்பாக விளையாடி வருகிறார்.


மழை தொடருவதால் ஆட்டம் தொடர தாமதமாகிவருகிறது....

பின்குறிபு -- லக்ஷுமன்,யுவராஜ் இன்று ஆட்டத்தில் இல்லை....

என்ன தான் உலக கோப்பையில் மோசமாக தோற்றாலும் ஹி ஹி ... கிரிக்கெட் பார்க்காம் இருக்க முடியலை...

Sunday, May 13, 2007

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் --> அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

எனது நலனில் அக்கறைகொண்டு வாழும் பல உயிர்களில் முதலாவது. எனக்காக எதையும் செய்வதுதாகாட்டும் (பிடித்த உணவு,எனது உடைகள் தேர்ந்துஎடுப்பது,அப்பாவிடம் எனக்காக வாத(சன்டையி)டுவது,இன்னும் பல.. ) அல்லது இரவு அலுவலகத்திலிருந்து எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும் கூட மகன் சாப்பிட்டானோ இல்லையோ என்று அந்நேரதில் தோசை அல்லது வேறு எதேனும் செய்து தந்து, என்று எனக்காகவும் மற்றும் எனது தமக்கைக்காவே வாழ்பவர்.

அம்மா என்னை பொறுத்தவரையில் ஒரு சூப்பர்வுமன் காலையில் 4.30 எழுந்து எனது தங்கை கல்லூரி செல்லத்தயார் படுத்தி பின்னர் என்னை அலுவலகம் செல்லத்தயார் படுத்தி அனுப்பிய பின்னர் வீட்டு வேலைகளை முடித்து,நாள் முழுவதும் இரவு 11 மணி வரை உழைப்பவர்.இது மட்டும்மின்றி அதிகம் படிகாவிட்டாலும் எங்கள் வீட்டு நிதித்துரை திறம்பட நடத்துபவர், இன்று நாங்கள் கொஞ்சம் வசதியாக சொந்த வீடு என்று வசதியாக இருபத்தற்கு முதல் காரனமாக இருப்பவர்,என் தந்தையே அடிக்கடி நிதி விஷயத்தில் உன் அம்மாதான் பெஸ்ட் என்று கூறுவார், இப்படி பல பட்டியல் இடலாம்....

ஆனால் அவரை பொறுத்தமட்டில் இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது.அவருக்கு பிள்ளைகள் மற்றும் கனவரின் நலன் மட்டும் தான் தெரியும்,அவர் இதுவரை எங்களை விட்டு ஒரு நாட்களுக்கு மேல் வெளியூர் சென்றது கிடையாது,ஒன்று போனால் எல்லோரையும் உடன் அழைத்து செல்வார் இல்லையெனில் செல்லவேமாட்டார்..

இது ஒன்றும் எனது அம்மாவிற்கு மட்டும் பொறுந்தாது, உலகில் உள்ள அனைத்து அம்மாவிற்கும் பொருந்தும், இருந்தாலும் என் அம்மா எனக்கு "தி பெஸ்ட்"

இப்படி பல விஷயங்களில் என்னை வியக்கவைக்கும் "என் அம்மாவிற்காக" இந்த பதிவு

அம்மா ... அன்னையர் தின வாழ்த்துக்கள் :)