Wednesday, January 17, 2007

இனையத்தில் நான் ரசித்த நகைச்சுவைகள்

பழைய வேலைக்காரி

அவர்: “திருச்சியில உன் ஜாடையில ஒரு பையனைப் பார்த்தேன்டா!”

இவர்: (உள்ளே நோக்கி மனைவியிடம்) “அப்படியே! நம்ம வீட்டு பழைய வேலைக்காரி எங்க போனான்னு தெரியிலேன்னு சொன்னியே... அவ திருச்சியிலதான் இருப்பாளாட்டம் இருக்கு!”


ஆபரேஷன் ரூம


“டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் ஆபரேஷன் ரூம்ல அரைமணி நேரம் பூஜை பண்ணிட்டுத்தான் வேறு வேலையே பார்ப்பாரு!”

“ஏன்?”

“பழைய ஆவிங்க ஏதாவது அங்க இருந்தா ஓடத்தான்!”

வயிறு ஆபரேஷன்

“பேஷண்டுக்கு வயித்துலதானே ஆபரேஷன்.. எதுக்குக் குப்புறப்படுக்க வச்சிருக்கீங்க?”

“டாக்டர் முன்னாடி கார் மெக்கானிக்கா இருந்தவராம்! `பெட்டுக்கடியில படுத்துக்கிட்டுத்தான் ஆபரேஷன் செய்வாராம்!”


பெண் போலீஸ்

“லாக்கப் கைதிக்குப் பாதுகாப்பாய் பெண் போலீஸைப் போட்டுட்டுப் போனது தப்பாப் போச்சா, ஏங்க?”

“அந்த கைதி அவ அழகை வர்ணிச்சி நைசா பூட்டைத் திறக்கச் சொல்லித் தப்பிச்சி ஓடிட்டான்!”


பணத்தை எங்க எடுக்கணும்

டாக்டர்: “அஜய் லேபாரட்டரியில ரத்தம், சிறுநீர், டெஸ்ட் எடுத்துக்கிட்டு, டாக்டர் குருமூர்த்தி கிட்டே இ.சி.ஜி. எடுத்துகிட்டு, அப்படியே குமார் எக்ஸ்ரேவிலே எக்ஸ்ரே எடுத்துக்கிட்டு, தும்பி ஸ்கேன் சென்டர்ல முழுசா ஒரு ஸ்கேன் எடுத்துக்கிட்டு...”

பேஷண்ட்: “அப்படியே பணத்தை எங்க எடுத்துக்கிட்டு வர்றதுன்னும் சொல்லிடுங்க டாக்டர்...!”

Monday, January 15, 2007

வீட்டினுள் டிஜிட்டல் திரையரங்கம் -- நாமே தயாரிக்கலாம்.......

நேற்று இரவு இந்த பதிவை போட்டு அது காலைலயில் காணாமல் போனதால் மீண்டும் போடவேண்டியாதயிற்று...

வழக்கம்போல் கூகிள் மேய்ந்து கொண்டிருக்கும் போது கன்னில் பட்ட ஒன்று, நம் வீட்டினின்னுள் ஒரு சிறிய திரையரங்கத்தையே மிக குறைந்தவிலையில் அதுவும் நாமே தயாரிக்கலாம் என்று இருந்தது. அப்பதிவின்படி ஒரு LCD மானிடர் மற்றும் ஒரு OHP இருந்தால் போதுமானது,இது மட்டுமின்றி உங்களூக்கு கொஞ்சம் ஹார்ட்வேர் பொருட்களை மாட்ட தெரிந்திருந்தால் போதுமானது. ஆகும் செலவும் மிகவும் குறைவு கூட .

இதைப்பற்றி மேலும் அறிந்து கொறள்ள இங்கே கிளிக் செய்யவும்.இங்கு செய்முறை விளக்கமும் ஒரு சிறிய விளக்க படமும் உள்ளது

முக்கிய குறிபு :0
இதை செய்து சரியாக வரவில்லையென்றால் என்னை யாரும் திட்ட வேண்டாம் என்று கேட்டுகொள்ளபடுகிறது.....

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

திருவண்ணாமலையில் இருந்தபோது பொங்கல் கொண்டாட்டங்கள் முன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும்,மற்றும் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் பொங்கல் வைத்து "பொங்கலொ பொங்கல்" என்று கூறி படையல் நடத்தி உற்ச்சகமாக கொண்டடுவோம்.

இந்த வருடம் சென்னையில் உள்ள விட்டில் இடம்மில்லாதலால் இம்முறை வீட்டினுள்தான் படையல் என்று நினைகிறேன்

என்ன இருந்தாலும் பொங்கல் பொங்கல் தான்.(முடிந்தவரை டிவி பார்க்காமல் கொண்டாடினாலே போதும் என்று நினைக்கிறேன்...)

மீண்டும் அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.