Tuesday, April 11, 2006

S.Ve சேகர் Vs நெப்போலியன்- தேர்தல் ரவுன்டப்

சென்னையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத்தொட்ங்கியுள்ள நிலையில் மயிலாபூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதில் பிரபல நகைச்சுவை மற்றும் நாடக நடிகர் S.Ve.சேகரும், ஆக்க்ஷ்ன் நடிகர் நெப்போலியன் போட்டியிடுகின்றன்ர்.

மயிலாப்பூர் என்றவுடன் அதன் குளமும்,பிராமனர்கள் வாழும் தெருக்ள் மற்றும் இன்னும் பழைய சென்னையை நினைவுட்டும் பகுதிகள் நிறைந்த ஒரு தொகுதி. இந்த முறை பிரபல நகைச்சுவை மற்றும் நாடக நடிகர் S.Ve.சேகர் ஆதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்க்கும் திமுக வேட்ப்பாளர் நடிகர் நெப்போலியன்.

சென்ற சனிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கிய S.Ve.சேகர் " இது உள்ளுர்வாசிக்கும்,வெளியூர்வாசிக்கும் நடக்கும் போட்டி,நான் மயிலாபூரில்1958 முதல் வசிப்பவன்". இவருக்கு இத்தொகுதில் அறிமுகம் தேவையில்லை மற்றும் பிராமன்னர் என்பது கூடுதல் பலம். ஆனால் அனைத்து பிராமன தரப்பு ஓட்டுக்களை கவர்வது கடினம் என்று ஓப்புக்கொள்கிறார். ஏன் எனில் " பலர் வீட்டில் இருந்தபடியே அரசியல் பற்றி அலசுவர் ஆனால் வெளியே வந்து ஓட்டு போடுவது இல்லை" என்கிறார்.

இவரை எதிர்த்து போட்டியிடும் நெப்போலியன் சென்ற முறை வில்லிவாக்கத்தில் போட்டியிட்டவர்.இம்முறை தொகுதி கூட்டனிக்கு சென்றுவிட்டதால் இத்தொகுதில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நடிகன் என்று தனக்காக விழும் ஓட்டுக்களை விட திமுகவிற்காக விழும் ஓட்டுக்களையே நம்பியுள்ளார்.

திரைப்படங்களில் வேண்டும்எனில் கதாநாயகன் நெப்போலியன் உச்சக்கட்டங்களில் வெற்றிபெறுவார் எனலாம் ஆனால் சட்டமன்ற இருக்கை போட்டியில் S.Ve.சேகர் is Mylapore's Favorite.

நன்றி- CNN-IBN.(செய்தி தொகுப்புக்காக)


1 comment:

பாரதிய நவீன இளவரசன் said...

மைலாப்பூரில் பல் பொதுவான வாக்காளர்களையும் S.Ve. சேகர் கவர்வார் என நான் நம்புகிறேன். அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போடக்கூடாது என்று நம்பும் என் போன்றவர்களிடமும் S.Ve. சேகருக்கு ஓட்டுப் போடுவதில் ஆட்சேபனை இருக்காது.

தவிர, பிராமணர்கள் குறித்து அவர் சொல்வது சரி - கூட்டம் கூட்டமாக வந்து (enmasse) ஒட்டுப்போடும் நிலையில் என்றுமே இருந்ததில்லை. மேலும், இன்றைய சூழலில், சங்கராச்சாரியாரின் கைது விஷயம் பற்றிய ஞாபகம் S.Ve. சேகருக்கு தர்மசங்கடத்தையே தரும்.

எல்லாவற்றையும் விட, தி.மு.கழகத்திற்கென்று பாரம்பரிய ஓட்டு வங்கி மையிலையில் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.