Sunday, June 11, 2006

உலகக்கோப்பை கால்பந்து -2006

உலகக்கோப்பை கால்பந்து -2006

     உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலக கால்பந்தாட்ட போட்டிகள் ஜெர்மனியில் வெள்ளியன்று கோலகலமாக துவங்கியது.எனக்கு உலக கால்பந்தட போட்டிகள் 1994ல் அமேரிக்காவில் நடந்த போது அறிமுகம் ஆனது,சிறு வயதில் இருந்து கிரிக்கட் விளையாடிய எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக படவில்லை ஆனாலும் என் தந்தை போட்டிகளை பார்க்கும்போது சில ஆட்டங்கள் பார்த்தேன், அப்போழுது நடந்த இறுதிபோட்டியில் பிரேசிலும்,இத்தாலியும் மோதியது, இறுதியில் பிரேசில் வெற்றி பெற்று நான்கவது முறையாக வென்றது,பின் 1998 பிரான்ஸ்சில் நடந்து போதும் எனது கால்பந்தாட அறிவு 1994ல் இருந்த் நிலையிலே இருந்தது, அப்போட்டியில் பிரான்ஸ் யாரும் எதிர்பாரதவன்னம் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
     2002ல் கொரியவும்,ஜப்பானும் சேர்ந்து போட்டியை நடத்தும் போது, எனது அறிவு சற்றே மேம்பட்டிருந்தது,காரனம் ESPN மற்றும் STAR SPORTS பார்த்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் மற்றும் இரோப்பிய கால்பந்தாட்ட போட்டிக்களே, 1998ல் சாம்பியான் ஆன பிரான்ஸ் முதல் சுற்றிலேயே வெளியேர, சொந்த நாட்டில் விளையாடும் தெம்பில் "ரெட் டெவில்ஸ்" தென்கொரிய அரையிருதிவரை முன்னேறியது, ஆனால் ஜெர்மனி அரையிருதியில் கொரியாவை தோற்க்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் ஜெர்மனியை எளிதில் வீழ்த்தி கோப்பையை 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
      ஒவ்வொரு முறை போட்டிகள் நடக்கும் போதும் போட்டியின் முடிவுகள் மற்றுமே தெரிந்து கொள்வது வழக்கமாய் வைத்திருந்தேன். 2002ல் இருந்து போட்டிகளை பார்த்தும் வந்த எனக்கு இம்முறை   செட்டாப் பாக்ஸ் இல்லாததால் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று என்னி இருந்தேன் ஆனால் SCV போட்டிகளை கான ESPN மற்றும் STAR SPORTS சேனல்களை இலவசமாகவே ஒளிபரப்ப வெள்ளியன்று நடந்த முதல் போட்டி ஜெர்மனி மற்றும் கோஸ்ட்டா ரிகா போட்டியை கான முடிந்தது.
     எதிர்பார்த்தது போலவே ஜெர்மனி 4-2 என்று வெற்றி பெற்றது,ஆனால் கோஸ்டா ரிக்காவினர் சிறப்பாக விளையாடினர் முக்கியாமாக அந்த அணியின் கோல்கீப்பர், இவர் இல்லையெனில் ஜெர்மனி மேலும் பல கோல்களை போட்டிருக்கும்.ஜெர்மன் நாட்டின் தடுப்பாட்டம் சற்று பலவீனமாகவே இருந்தது அந்த அணியின் நட்ச்சத்திர கீப்பர் ஆலிவர் கான் விளையாடதும் ஒரு காரனம்.அணித்தலைவை மைக்கல் பேலக் இல்லாமலே அவர்களது எதிர்ப்பாட்டம் நன்றாக இருந்தது, பேலக்கும் சேர்ந்தால் அது மேலும் வலுவடையும். கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றான ஜெர்மனி போட்டியை வெற்றியுடன் துவங்கியது.
     
     கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கும் அணிகளான இங்கிலாந்தும்,அர்ஜெண்டினாவும் தத்தம் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பை வெல்லும் கனவை நன்றாகவே துவக்கியுள்ளன..

Thursday, June 01, 2006

இடஓதுக்கீடு ...........

பதிவு போட்டு நீண்ட நாட்க்கள் ஆயிற்று,வேலை பளு ஒரு காரனம் என்றாலும்,சோம்பேறித்தனமும் ஒரு காரனம்,இதையெல்லாம் விட எதைப்பற்றி பதிவு என்பது அதை மேலும் தாமதப்படுத்தியது.ஏன் ஏனில் நம் பதிவர் கூட்டம் போடும் பதிவுகள் மற்றும் அதை அவர்கள் அலசும் விதமும் ஒரு பதிவை போடும் முன் பல முறை யோசிக்கவைத்தது. இப்போழுது நாட்டின் சூடான விவாதம் வலைப்பதிவு மற்றும்மின்றி அனைத்து செய்தி ஊடகங்களிலும் அலசபடும் இடஓதுக்கீடு பற்றி நாளேடு ஒன்றில் பார்த்த கார்ட்டுன் சற்றே யோக்கவைத்தது.(கார்ட்டூன் கிடைக்கவில்லை.....)


அது ஓன்றும் இல்லை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள்,பிற்படுத்தபட்ட மக்களுக்கான இடஓதுக்கீட்டு பரிந்துரையை எதிர்க்காமல்,ஒன்றுப்பட்டு ஆதரித்தது மட்டும் இல்லாமல் அதை மிக விரைவாகவும் ஒரு மசோதா நிறைவேற்ற உள்ளனர்.ஆனால் நாடளுமண்றம் மற்றும் சட்டமண்றங்களில் பெண்களுக்கான 33% இடஓதுகீட்டை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

பிற்படுத்தபட்ட மக்களுக்கான இடஓதுக்கீட்டை விரைந்து அமல் படுத்தும் காங்கிரஸ் கட்சி இதை அமல் படுத்த பயப்படுவது ஏன்.?

பிற்படுத்தபட்ட மக்களுக்கான இடஓதுக்கீட்டை அனைத்துக்கட்சியின்ரும் ஆதரிப்பது கட்சி கொள்கை மட்டும்மின்றி, இடஓதுக்கீட்டை எதிர்தோ/திருத்தம் கேட்க்காமல் இருப்பது பின் வரும் தேர்தல்களில் பெருவாரியாக உள்ள பிற்படுத்தபட்ட மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்க்குத்தான்.
ஆனால் பெண்களுக்கான 33% இடஓதுக்கீடு அவர்கள் எதிர்பார்க்கும் ஓட்டுக்களை பெற்று தாரதோ என்னவோ ??

இது தான் ஓட்டு அரசியல் (vote politics) என்பார்களோ ??

Sunday, April 16, 2006

மணிமொழி நீ என்னை மறந்துவிடு

இந்த வார விகடனில் "விகட்ன் 81" பகுதியில் கல்கண்டு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த 'சங்கர்லால்' புகழ் தமிழ்வாணன் விகடனில் 1959-ஆம் ஆண்டில் ஒரு மர்ம தொடர்கதை எழுதியதாக கூறி அந்த தொடர்கதையின் முதல் பக்கத்தை சிறு படமாக வெளியிட்டுள்ளனர். அப்படத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இருந்ததால் அதை படித்த போது அத்தொடர்கதையின் ஒரு பக்கம் ஒரு சிறுகதைக்கு போல் இருந்தது. இதொ அதை கவனிக்க தவறியவர்களுக்கு.

வித்தியாசமாக இருக்கட்டுமே என்று (பதிவு போட வேறு எதும் இல்லாததால்/கிடைக்காதால்) ...

இனி கதை.........

அவர் மணிமொழியின் மாமனார்,தம் நிலையை இழந்து மயக்கம் மடைந்து படுக்கையில் கிடந்தார் ! மணிமொழி அவர் அருகில் சென்று பார்த்தாள்.டாக்டர் எழூந்து நின்று மணிமொழியின் மாமியாரிடம் " இரத்தக்கொதிப்பு ! நல்ல ஓய்வு வேண்டும்,அவர் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக்க் கொள்ளுன்ங்கள் நான் போய் மருந்து அனுப்புகிறேன்" என்றார்.

மாமியார் அழுது கொண்டே தலையை அசைத்தார்.டாக்டர் புறப்பட்டார், முத்தழகு டாக்டரின் பையைக் கையில் எடுத்துக் கொண்டு பின்னால் சென்றான்.வெளியே கார் புறப்படும் சத்தம் கேட்டது.
மணிமொழி மெல்ல நடந்து வெளியே தோட்டத்திற்கு வந்து மரத்தடியில் புல் தரையில் உட்கார்ந்து அன்னாந்து பார்த்தாள். ஒரு பறவை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது மணிமொழி போல் அதற்க்கும் எங்கே போவது என்ன செய்வது என்று தெரியவில்லையா.

பறவை வானத்தைச் சுற்றி வட்டமிட்டதைப் போல மணிமொழியின் மனமும் இரண்டு பேர்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது அவர்கள் --

அப்பா : முத்தழகு !

'அப்பாவை பிரிந்து வந்தது போல முத்தழகையும் பிரிந்து தாம் எங்காவது சென்று விடுவதுதான் நல்லது அவர் 'அண்ணி அண்ணி ' என்றழைக்கும்பொதெல்லாம் நமக்கு இதயமே பிளந்து விடுவது போல் இருக்கிறது ! என்றைக்கும் உண்மை நிலையானது. ஒரு நாளைக்கு உண்மை தெரிந்தப்பிறகு எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது ? எந்த்க் காரண்த்தைக் தாம் இந்த வீட்டில் தங்கியிருக்க முடியாது ! இன்றைக்கே இந்த வீட்டை விட்டுப் போய் விட்டால் என்ன? இன்றைக்கேவா ? மாமனார் மனம் மறந்து கிடக்கிற இந்த நேரத்தில் நாம் வெளியேறலாமா? நம்மைக் கானோம் என்ற செய்தி மாமனாருக்குத் தெரிந்தால்.....?

இப்படி கண்டதையெல்லாம் நினைத்து கொண்டிருந்த மனிமொழியின் மனம் கலங்கி நின்றது...

*******************************
இந்தக் தொடர்க்கதையை முழுமையாக யாரேனும் படித்திருந்தால் அதை ஒரு பதிவாக இடலாமே ........... ? திட்டுபவர்களும் திட்டலாம்...

Tuesday, April 11, 2006

S.Ve சேகர் Vs நெப்போலியன்- தேர்தல் ரவுன்டப்

சென்னையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத்தொட்ங்கியுள்ள நிலையில் மயிலாபூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதில் பிரபல நகைச்சுவை மற்றும் நாடக நடிகர் S.Ve.சேகரும், ஆக்க்ஷ்ன் நடிகர் நெப்போலியன் போட்டியிடுகின்றன்ர்.

மயிலாப்பூர் என்றவுடன் அதன் குளமும்,பிராமனர்கள் வாழும் தெருக்ள் மற்றும் இன்னும் பழைய சென்னையை நினைவுட்டும் பகுதிகள் நிறைந்த ஒரு தொகுதி. இந்த முறை பிரபல நகைச்சுவை மற்றும் நாடக நடிகர் S.Ve.சேகர் ஆதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்க்கும் திமுக வேட்ப்பாளர் நடிகர் நெப்போலியன்.

சென்ற சனிக்கிழமை பிரச்சாரத்தை தொடங்கிய S.Ve.சேகர் " இது உள்ளுர்வாசிக்கும்,வெளியூர்வாசிக்கும் நடக்கும் போட்டி,நான் மயிலாபூரில்1958 முதல் வசிப்பவன்". இவருக்கு இத்தொகுதில் அறிமுகம் தேவையில்லை மற்றும் பிராமன்னர் என்பது கூடுதல் பலம். ஆனால் அனைத்து பிராமன தரப்பு ஓட்டுக்களை கவர்வது கடினம் என்று ஓப்புக்கொள்கிறார். ஏன் எனில் " பலர் வீட்டில் இருந்தபடியே அரசியல் பற்றி அலசுவர் ஆனால் வெளியே வந்து ஓட்டு போடுவது இல்லை" என்கிறார்.

இவரை எதிர்த்து போட்டியிடும் நெப்போலியன் சென்ற முறை வில்லிவாக்கத்தில் போட்டியிட்டவர்.இம்முறை தொகுதி கூட்டனிக்கு சென்றுவிட்டதால் இத்தொகுதில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நடிகன் என்று தனக்காக விழும் ஓட்டுக்களை விட திமுகவிற்காக விழும் ஓட்டுக்களையே நம்பியுள்ளார்.

திரைப்படங்களில் வேண்டும்எனில் கதாநாயகன் நெப்போலியன் உச்சக்கட்டங்களில் வெற்றிபெறுவார் எனலாம் ஆனால் சட்டமன்ற இருக்கை போட்டியில் S.Ve.சேகர் is Mylapore's Favorite.

நன்றி- CNN-IBN.(செய்தி தொகுப்புக்காக)


Sunday, March 12, 2006

வாழ்த்துக்கள் அனில்

வாழ்த்துக்கள் அனில்

     அனில்கும்பள! ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த போது கும்பள போட்ட பந்தை, இயன் பெல் விக்கட் கிப்பர் தோனியிடம் காட்ச் கொடுத்து அவுட் ஆக இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
     இந்த பதிவு இதை பற்றியது அல்ல, இது மூன்று மாதங்களுக்கு முன் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாம் நபர் அனில்கும்பள பற்றியது.நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவர் வீசிய பந்தில் ஹார்மின்சன் எல்.பி.டபிள்யு ஆக அவர் நம் நாட்டின் 500 விக்கட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் ஆனார்.பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பை கொன்டாடும் நாட்டில் இவர் எடுத்த 500 விக்கட்டுக்கள் என்ற ஆசாத்திய சாதனையை குறைந்த மக்களின் கவனத்தையே பெற்று இருக்கும்.ஏன் எனில் இது நாள் வரை இவரை மற்ற முன்னனி பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிட்டே பார்த்துள்ளோம்.
இவர் வார்னே () மூரளிதரன் மாதிரி பந்தை திருப்பாதவர் தான் ஆனால் இவரின் பிளிப்ப்ர் (Flipper),ÜìÇ£(Googly), ¼¡ô ŠôÀ¢ñ½÷ (Top Spinner)      ÁüÚõ §¿Ã¡¸ ÅÕõ (Straight one) ±ô§À¡ØÐõ Áð¨¼Â¡Ç÷¸Ç¢ý Áɾ¢ø «îºò¨¾ ²üÀÎò¾ ¾ÅÈ¢ÂÐ þø¨Ä.¯ñ¨Á¢ø 500 விக்கட்டுக்கள் ̨Èó¾ §À¡ðÊì¸Ç¢ø Å£úò¾¢Â இரண்டாம் Å£Ã÷ ¬Å¡÷ (501 விக்கட்டுக்கள்- 105 ¬ð¼í¸Ç¢ø ). þÐ À¡ì¸¢Š¾¡É¢ø ÓýɧÁ ¿¢¸Æ §ÅñÊÂÐ,«Å÷¸û ÀóРţÇ÷¸¨Ç ¦¸¡øÖõ À¢ðî͸¨Ç ¾Â¡Ã¢ì¸¡Áø þÕó¾¢Õó¾¡ø.

500 விக்கட்டுக்கள் ÁüÈ Å£Ã÷¸Ù¼ý ´Õ ´ôÀ¢Î ........

   Å£Ã÷¸û            ¬ð¼í¸û     µÅ÷    விக்கட்டுக்கள்   Ãý Å¢¸¢¾õ
Óò¨¾Â¡ ÓÃÇ¢¾Ãý     87     4970     505     22.89     
அனில்கும்பள          105*     5493.1     501     28.87     
¦¸Äý ¦Á츢áò          110     4286.4     509     21.01     
§„ý Å¡÷§É          108     5037.1     501     25.51     
¸¡÷ðÊÉ¢ Å¡ø‰          129     4835.1     504     24.56     

  
¿ýÈ¢

Thursday, March 09, 2006

எனது முதல் பதிவு

என் நன்பன் விநோத் இடக்கை என்னும் பிளாக் (Blog) பற்றி அறிமுகம் செய்த ஓரு வருடத்திற்க்கு பிறகு நானும் பதிவு இடவேண்டும் அதுவும் தமிழ்ல் பதிய வேண்டும் என்று ஆவல் துவ்ங்கி பின்பு அதை பற்றி தகவல் சேகரித்து , தமிழ் தட்டச்சு தெரி யாமல் எப்படி என்று நிறுத்தி மீண்டும் தமிழ் தட்டச்ச பற்றி தகவல் சேகரித்த இதோ எனது முதல் பதிவு
நன்றி
விநோத்-இடக்கை பற்றி அறிமுகம் செய்தற்க்கு
தந்தை - எழுத்து பிழை திருத்தியதற்க