Monday, July 23, 2007

நேற்று நான் ரசித்தது....

நேத்து காலை எழுந்திரிச்சதே லேட் 8.30 மணிக்கு தான் (ஞாயிற்று கிழமை 8 மணிக்கு எழுந்திரிக்காம காலைல 4 மணிக்கா எழுந்திருப்பாங்க என் வென்று??) பின்ன 9 மணிக்கு கடந்த வாரம் புடுங்கின ஆனிய எல்லாம் டப்பாய்ல போடற வேலைய வச்சிக்கிட்டு 8 மணிக்கு எழுந்தா லேட்டு தான் , எழுந்தவுடன் காலையிலே அப்பாவோட சண்ட வேற அப்பிடியே அடிச்சிபுடிச்சி மெதுவா 9 மணிக்கா ஸ்டேஷன் போன செங்கல்பட்ல இருந்து ஒரு டிரெயின் வந்தது.நம்ப தான் எப்பவும் செங்கல்பட்டு டிரெயின் தாம்பரத்துக்கு அந்தான்ட இருந்து வரவங்களுக்காக மட்டும் நினைச்சிகிறவனாச்சே அந்த டிரெயின விட்டுட்டு ,அடுத்த பிளாட்பாரதில் காலியாக இருந்த ஒரு வன்டியில உக்கார்நதா, கால்மணி நேரமா வண்டிய கிளப்பறதுக்குன்டான அறிகுறியே இல்லை என்னடானு பார்த்தா சன்டே சர்விஸ் கால்மணிக்கு ஒரு தடவ தான் வண்டியாமாம் . அதவிட கொடுமை நான் உட்கார்ந்துகிட்ட இருந்த வன்டி பணிமனைக்கு போகுது அப்பதான் அறிவிப்பு வேற ,அதுமட்டுமில்லாம அடுத்த பிளாட்பாரதில் வரதும் பணிமனைக்காம் . ஒருவழியா 10 மணிக்கு ஆபிஸ் வந்தா நம்ம டீம் மக்க எல்லாம் பாசகார பசங்க ,நீங்க இல்லாம எப்படி ராசா புடுங்கின ஆனிய டப்பாயில கொட்டறதுனு வேற கேக்கிறானுங்க. ஒரு வழியா எல்லா டப்பாயிலும் கொட்டிட்டு ,கொட்டினது சரியானு பார்த்த ஒரு இரண்டு ஆனிய கானல,அப்புறம் தேடி அது புடுங்கிறது ஆள் ஏற்பாடு பன்னிட்டு டப்பாயில கொட்ற வரைக்கும் நம்ம தேன்கூட்ல என்ன இருக்குனு பார்கலாம் வந்தா , அபிஸ்ல நீ ஆனி புடுங்கற வேலைய மட்டும் பாருனு "பிளாக்" வார்த்தைக்கே வெச்சானுங்க ஒரு ஆப்பு.இனி அம்புட்டுதான் நினைச்சிகிட்டே அப்பிடியே போய் கூகிள்ள தமிழ் பிளாக் கதைகள் தேடினப்ப மாட்டினது தான் "நேற்று நான் ரசித்தது" ( எப்படி தலைப்ப கொண்டு வந்தோம்ல)..

"உனக்காக " என்று சுகந்தி என்பவர் எழுதிய தொடர்கதை.. (சூப்பரா எழுதியிருக்கிங்க)


நிறையபேர் எற்கனவே படிச்சிருப்பிங்க ,என்னையா மாதிரி எற்கனவே படிக்கதவங்களுக்கு இதொ உனக்காக

எப்படி நம்ம வீக்கெண்டு பதிவு ???

2 comments:

Vino said...

too many spelling mistakes..

Anonymous said...

No blogs yet for this year?