Thursday, June 01, 2006

இடஓதுக்கீடு ...........

பதிவு போட்டு நீண்ட நாட்க்கள் ஆயிற்று,வேலை பளு ஒரு காரனம் என்றாலும்,சோம்பேறித்தனமும் ஒரு காரனம்,இதையெல்லாம் விட எதைப்பற்றி பதிவு என்பது அதை மேலும் தாமதப்படுத்தியது.ஏன் ஏனில் நம் பதிவர் கூட்டம் போடும் பதிவுகள் மற்றும் அதை அவர்கள் அலசும் விதமும் ஒரு பதிவை போடும் முன் பல முறை யோசிக்கவைத்தது. இப்போழுது நாட்டின் சூடான விவாதம் வலைப்பதிவு மற்றும்மின்றி அனைத்து செய்தி ஊடகங்களிலும் அலசபடும் இடஓதுக்கீடு பற்றி நாளேடு ஒன்றில் பார்த்த கார்ட்டுன் சற்றே யோக்கவைத்தது.(கார்ட்டூன் கிடைக்கவில்லை.....)


அது ஓன்றும் இல்லை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள்,பிற்படுத்தபட்ட மக்களுக்கான இடஓதுக்கீட்டு பரிந்துரையை எதிர்க்காமல்,ஒன்றுப்பட்டு ஆதரித்தது மட்டும் இல்லாமல் அதை மிக விரைவாகவும் ஒரு மசோதா நிறைவேற்ற உள்ளனர்.ஆனால் நாடளுமண்றம் மற்றும் சட்டமண்றங்களில் பெண்களுக்கான 33% இடஓதுகீட்டை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

பிற்படுத்தபட்ட மக்களுக்கான இடஓதுக்கீட்டை விரைந்து அமல் படுத்தும் காங்கிரஸ் கட்சி இதை அமல் படுத்த பயப்படுவது ஏன்.?

பிற்படுத்தபட்ட மக்களுக்கான இடஓதுக்கீட்டை அனைத்துக்கட்சியின்ரும் ஆதரிப்பது கட்சி கொள்கை மட்டும்மின்றி, இடஓதுக்கீட்டை எதிர்தோ/திருத்தம் கேட்க்காமல் இருப்பது பின் வரும் தேர்தல்களில் பெருவாரியாக உள்ள பிற்படுத்தபட்ட மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்க்குத்தான்.
ஆனால் பெண்களுக்கான 33% இடஓதுக்கீடு அவர்கள் எதிர்பார்க்கும் ஓட்டுக்களை பெற்று தாரதோ என்னவோ ??

இது தான் ஓட்டு அரசியல் (vote politics) என்பார்களோ ??

No comments: