Sunday, June 11, 2006

உலகக்கோப்பை கால்பந்து -2006

உலகக்கோப்பை கால்பந்து -2006

     உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலக கால்பந்தாட்ட போட்டிகள் ஜெர்மனியில் வெள்ளியன்று கோலகலமாக துவங்கியது.எனக்கு உலக கால்பந்தட போட்டிகள் 1994ல் அமேரிக்காவில் நடந்த போது அறிமுகம் ஆனது,சிறு வயதில் இருந்து கிரிக்கட் விளையாடிய எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாக படவில்லை ஆனாலும் என் தந்தை போட்டிகளை பார்க்கும்போது சில ஆட்டங்கள் பார்த்தேன், அப்போழுது நடந்த இறுதிபோட்டியில் பிரேசிலும்,இத்தாலியும் மோதியது, இறுதியில் பிரேசில் வெற்றி பெற்று நான்கவது முறையாக வென்றது,பின் 1998 பிரான்ஸ்சில் நடந்து போதும் எனது கால்பந்தாட அறிவு 1994ல் இருந்த் நிலையிலே இருந்தது, அப்போட்டியில் பிரான்ஸ் யாரும் எதிர்பாரதவன்னம் பிரேசிலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
     2002ல் கொரியவும்,ஜப்பானும் சேர்ந்து போட்டியை நடத்தும் போது, எனது அறிவு சற்றே மேம்பட்டிருந்தது,காரனம் ESPN மற்றும் STAR SPORTS பார்த்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் மற்றும் இரோப்பிய கால்பந்தாட்ட போட்டிக்களே, 1998ல் சாம்பியான் ஆன பிரான்ஸ் முதல் சுற்றிலேயே வெளியேர, சொந்த நாட்டில் விளையாடும் தெம்பில் "ரெட் டெவில்ஸ்" தென்கொரிய அரையிருதிவரை முன்னேறியது, ஆனால் ஜெர்மனி அரையிருதியில் கொரியாவை தோற்க்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பிரேசில் ஜெர்மனியை எளிதில் வீழ்த்தி கோப்பையை 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
      ஒவ்வொரு முறை போட்டிகள் நடக்கும் போதும் போட்டியின் முடிவுகள் மற்றுமே தெரிந்து கொள்வது வழக்கமாய் வைத்திருந்தேன். 2002ல் இருந்து போட்டிகளை பார்த்தும் வந்த எனக்கு இம்முறை   செட்டாப் பாக்ஸ் இல்லாததால் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று என்னி இருந்தேன் ஆனால் SCV போட்டிகளை கான ESPN மற்றும் STAR SPORTS சேனல்களை இலவசமாகவே ஒளிபரப்ப வெள்ளியன்று நடந்த முதல் போட்டி ஜெர்மனி மற்றும் கோஸ்ட்டா ரிகா போட்டியை கான முடிந்தது.
     எதிர்பார்த்தது போலவே ஜெர்மனி 4-2 என்று வெற்றி பெற்றது,ஆனால் கோஸ்டா ரிக்காவினர் சிறப்பாக விளையாடினர் முக்கியாமாக அந்த அணியின் கோல்கீப்பர், இவர் இல்லையெனில் ஜெர்மனி மேலும் பல கோல்களை போட்டிருக்கும்.ஜெர்மன் நாட்டின் தடுப்பாட்டம் சற்று பலவீனமாகவே இருந்தது அந்த அணியின் நட்ச்சத்திர கீப்பர் ஆலிவர் கான் விளையாடதும் ஒரு காரனம்.அணித்தலைவை மைக்கல் பேலக் இல்லாமலே அவர்களது எதிர்ப்பாட்டம் நன்றாக இருந்தது, பேலக்கும் சேர்ந்தால் அது மேலும் வலுவடையும். கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றான ஜெர்மனி போட்டியை வெற்றியுடன் துவங்கியது.
     
     கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கும் அணிகளான இங்கிலாந்தும்,அர்ஜெண்டினாவும் தத்தம் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பை வெல்லும் கனவை நன்றாகவே துவக்கியுள்ளன..

No comments: