Sunday, May 20, 2007

பிளட் டைமன்டு -- எனது பார்வையில்

நான் சமிபத்தில் பார்த்து ரசித்த இரண்டு திரைபடங்கள் "பர்சுய்ட் அப் ஹப்பினஸ் (pursuit of Happiness)" மற்றும்& "பிளட் டைமன்டு (Blood Diamond)" முதல் திரைப்படம் சற்று மென்மையான கதையமைப்பை கொன்டது இதனைப்பற்றி பிறகு ஓரு நாள் பார்க்கலாம்..

இந்த பதிவு இரண்டாம் படத்தினை பற்றியது, இது படத்தினை பற்றிய விமர்சனம் அல்ல, விமர்சனம் பன்னும் அளவு நான் ஒன்றும் எக்ஸ்பர்ட் இல்லை, இது அந்த படத்தினை பற்றியது அவ்வளவே..

முதன் முதலாக பெரிய பதிவு போடுவதால், படிப்பவர்கள் வாக்கிய கோர்வை சரிவர இல்லாமைக்கு மண்ணிக்கவும்


படம் ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்தில் துவஙகு்கிறது, அந்த கிராமத்தில் உள்ள ஒரு மீனவனின் விட்டில், தன் மகன் படிப்பதை கண்டு பெருமை படும் அப்பா சாலமன் (டிஜிமோன் ஹோனசு)வாழ்க்கையில் திடீர் என்று அந்த கிரமத்துக்குள் புகும் தீவிரவாத கும்பல்லால் தடம் புரள்கிறது. கிரமத்துக்குள் புகும் தீவிரவாத கும்பல் அங்கு இருக்கும் பென்களை கொன்று ஆன்களை பிடித்து வலிமையானவர்களை வைரம் தோன்டும் அடிமைகளாகவும் வலிமையற்றவர்களை ஈவு இரக்கமின்றியும் கொல்கிறது,தன் குடும்பத்தை காப்பாற்றும் போது அக்கும்பலிடம் மாட்க்கொள்ளும் சாலமன் வைரம் தோன்டும் பனிக்கு செல்கிறான்.வைரம் தோன்டும் இடத்தில் ஒரு மிக பெரிய சிகப்பு நிற வைரம் ஒன்றினை கண்டுபிடித்து ஒளித்து வைக்கும் வேளையில் தீவிரவாத கும்பலின் தலைவன் பார்வையில் படுகிறான் அப்போது அங்கு வரும் உள் நாட்டு இரானுவதினரிருடன் நடக்கும் சன்டையில் இருவரும் தனி தனியே சிறைபிடிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் வைரம் தோன்டும் கும்பலிடம் இருந்து குறைந்த விலை கொடுத்தும் அல்லது அவர்களுக்கு சொகுசாக வாழ டிவி போன்றவற்றை கொடுத்து வைரத்தை பெற்று கள்ளத்தனமாக வெளிமார்கெட்டுக்கு கொன்டுவந்து அதிக விலைக்கு விற்க்கும் இடைத்தரகனாக டேனி ஆர்சர் (லியர்னடோ டி காப்ரியோ) அவனை வேலைக்கு அமர்த்தி வைரங்களை பெற்று அதில் நிரைய பணம் பன்னும் நபரக கலோனல் கோடிசு (அர்னால்டு வோல்சோ மம்மி பட வில்லன்).

ஒரு முறை வைரம் கடத்திக் கொன்டு வரும் போது உள் நாட்டு இரனுவத்தினரிடம் மாட்டி சிறை செல்லும் டேனி அங்கு தீவிரவாத கும்பல் தலைவனுகும் சாலமனுக்கும் நடக்கும் ஒரு வாக்குவதத்தில் அவன் ஒளித்து வைத்திருக்கும் வைரம் பற்றி அறிகிறான்,சிறையை விட்டு வெளிவரும் டேனி ,சாலமனையும் அவனுக்கே தெரியாமல் வெளியெ கொண்டு வருகிறான், இதனிடையே தீவிரவாத கும்பலின் தலைவன் சிறையிலில் நடக்கும் கலவரதில் தப்பித்து மீன்டும் கிரமத்திற்கு சென்று சாலமனின் மகனை பிடித்து அவனுக்கு துப்பாக்கி,மற்றும் போதை மருந்தை கொடுத்து அவனை ஒரு கமான்டர் என்று கூறி அவனுக்குள் ஒரு போதை வெறியை உன்டாக்கி குடும்பத்தை மறக்க செய்து ,சாலமனிடம் இருந்து வைரத்தை பெறுவதற்கு திட்டமிடுகிறான்

இழந்த தன் குடும்பத்தை தேடும் சாலமனிடம் வந்து டேனி தனக்கு அந்த வைரத்தை கொடுத்தால் உன் குடும்பத்தை தேட உதவுவதாக பேரம் பேசுகிறான்,முதலில் மறுத்தாலும் பின்னர் மிக பெரிய ஆப்பிரிக்காவில் கறுப்பினத்தினை சேர்ந்த தன்னால் ஒன்றும் இயலாது என்பதால் பேரத்திற்கு சம்மதிக்கிறான்.

இதனைடையே அமேரிக்காவில் இருந்து வந்து வைரங்கள் எப்படி ஆப்பிரிக்கவிலிருந்து கள்ளத்தனமாக மார்க்கட்டுக்கு போகிறது என்று அறிய வரும் பத்திரிக்கையாளர் மேன்டி போவன் (ஜெனிபர் கூளுனி),இடை தரகனான டேனியிடமே அவனிடம் இருந்து வைரம் வாங்கும் பெரிய நிறுவனங்களை பற்றி துரத்தி துரத்தி கேட்கிறாள்

வைரத்தை தேடி டேனியும்,தன் குடும்பத்தை தேடி செல்லும் சாலமனும்,உள் நாட்டு கலவரங்களிடையே உயிரை பனயம் வைத்து செல்கின்றனர், ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலையில் ,பத்திரிக்கையாளர் ஆன மேன்டியிடம் உதவி கேட்கிறான் டேனி ,முதலில் மறுத்தாலும் பின்னர் டேனி பேட்டி தருவதற்கு ஒப்புகொள்வதால் சம்மதித்து,பத்திரிகையாளார் செல்லும் வாகனத்தில் அழைத்து செல்கிறாள் .அங்கே சாலமன் ஐநா சபையின் அகதிகள் முகாமில் தன் மனைவியையும் மகளையும் கான்கிறான், மகனை தீவிரவத கும்ப்பல் தூக்கி சென்றதை அறிந்து துடிக்கிறான். இதனிடையே ஆப்ரிக்காவில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தினால்,மக்கள் அகதிகளாக் அவதிபடுவுது,சிறுவயதிலேயெ துப்பாக்கி எந்தி கல்வரத்தில் கை,கால் இழந்து பரிதாமாக இருக்கும் சிறுவர்கள், அவர்களை எடுத்து கல்வி புகடும் வயதான நபர் பின்னர் அதே நபர் வேறு சில சிறுவர்களின் துப்பாக்கிக்கு இரையவது,டேனிக்கும் , மேன்டிக்கும் இடையே எற்ப்படும் மெல்லிய காதல் என்று படம் பயனிகிறது.

கானமல் போன மகன் கிடைத்தான, சாலமன் குடும்பத்துடன் இனைந்தான ?, டேனிக்கு வைரம் கிடைத்தா ? பல்லாயிரக்கனக்கான் மக்களின் இரத்ததில் இருந்து வரும் வைரத்தை குறைந்த விலைக்கு வாங்கிவிற்றும் பெரியமனிதர்களின் முகமூடியை மேன்டிக் எப்படி கிழித்தெரிந்தார ? என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.


படதில் பல காட்சிகள் பல காட்சிகள் நச்சென்றும்/முகத்தில் அறைவது போன்றும் அமைத்துள்ளார் இயக்குனர். உதரனதிற்கு சில

ஆப்பிரிக்காவில் யாரை யார் எப்பொழுது கொல்வார்கள் என்றே தெரியாது அதுற்கு அங்குளவர்கள் கூறுவது " TIA -- திஸ் இஸ் ஆப்பிரிக்கா" . இதே வாக்கியம் கடைசியில் தன்னை ஆளாக்கிய கலோனல் கோடிசுவை வைரத்திற்காக கொல்லும் காட்சியில் இறக்கும் தருவாயில் டேனியை பார்துது கேட்பார்.

அதேப்போல் சாலையில் விபத்துக்குள்ளான வாகனத்தில் உள்ளவர்களை காப்பற் அவ்வழியில் வரும் பத்திரிக்கையாளர்கள் முயலும் போது அதுவரை பதுங்கியிருந்து தீவிரவாதிகள் தாக்ககுவது.தீவிரவாத கும்பலில் இருக்கும் மகனை தேடி வரும் சாலமனை மகன் தீவிரவாத போதையில் தாக்குவதும் பின்னர் அதே மகன் டேனியின் முன்பு துப்பாக்கி எடுத்து நீட்டும் போது தன் மகன் எப்படிபட்டவன் என்று சாலமன் மகனிடம் கூறுவது போன்ற காட்சிகளை சொல்லலாம்...

டெக்கினிகல் விஷயங்களில் ஹாலிவுட் படங்களுக்கே உரிய அனைத்தும் இப்படத்தில் உள்ளது, இருந்தாலும் ஆப்பிரிக்காவின் புழுக்கம் நிறைந்த இடங்களாகட்டும் , அடர்ந்த காடுகள் என்று ஓளிபதிவு சிறப்பாகவே இருக்கிறது...

படம் முடியும் போது 2003 கிம்பர்ளி ஒப்பந்தம் இது போன்று வைரங்களை கொன்டு வருவதில்லை என்றும் என்று கையெழுத்தாகிறது என்றும், ஆனால் இன்னமும் இது போல் வைரங்கள் கள்ளத்தன்மாக வருகிறது என்கிறது . இது மட்டும்மின்றி இன்னும் ஆப்பிரிக்காவில் 200,000 சிறார்கள் தீவிரவதிகாளக, இருகிறார்கள் என்கிறது.இன்று நாம் பயன்படுத்தும் வைரத்தில் 20-40% வைரம் மட்டுமே நேர்வழில் கொன்டுவரப்படுவதாகவும் மீதம் உள்ள வைரங்கள் இப்படத்தில் கூறபட்டுள்ளது போல் பல்வேறு கைகள் மாறி கள்ளத்தன்மாக வருவதாகவும் இப்படம் கூறுகிறது.

படத்தை பார்த்து முடிக்கும் போது வைரத்தின் மீது ஒரு வெறுப்பையே படம் உண்டாக்குகிறது அவ்வளவு அளவு படத்தின் தாக்கம்.

4 comments:

rv said...

நல்ல படம்.. பார்த்தோன்ன எனக்கும் வைரங்கள் மேல வெறுப்புதான் வந்திச்சு... ஆனா மாமனார் மோதிரம் பண்ணி ஆசையா போட்டா வேணாம்னு சொல்வோமா?? :)))

ஆப்ரிக்காங்கறது ஒரு கண்டம். அது என்னவோ ஆப்கானிஸ்தான் மாதிரி ஒரு நாடுன்னு தானு வெளியாட்கள் பூந்து விளையாடுவதில் பாவம் அப்பாவி மக்கள் தான்..

ஹோட்டல் ருவாண்டா பார்த்திருக்கீங்களா?

//பின்னுட்டங்கள் இடுபவர்களுக்கு நன்றி .. ஹி ஹி//

நன்றிக்கு நன்றி!

Vino said...

oru sila pizhikalai thavirthu this one is real good attempt...hats off buddy.

ராஜா said...

// ஆனா மாமனார் மோதிரம் பண்ணி ஆசையா போட்டா வேணாம்னு சொல்வோமா?? :))) ///

கொஞ்சம் இல்ல கஷ்டம்தான் இருந்தாலும் வேண்டாம் சொல்லித்தான் பார்போமே :)
அதுக்கப்பறம் மாமனாருக்கு நாம வைரம் போல் ஆகிடுவோம்

பின்னூட்டம் இட்டதிற்கு நன்றி

ராஜா said...

// oru sila pizhikalai thavirthu this one is real good attempt...hats off buddy. //


கண்டிப்பாக பிழைகளை திருத்திககொள்வேன்டா, பிழைகள் என்ன என்று எனக்கு தனியாக ஈ மெயில் அனுப்பவும்..